1. Home
  2. தமிழ்நாடு

கம்பத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சுருளி அருவி பற்றி தெரியுமா ?

1

கம்பத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  சுருளி அருவி. 18-ம் நூற்றாண்டின் பாறைக்குடைவு சிற்பக்கலையை பிரதிபலித்துக் கொண்டிருக்கும் 18 குகைகளையுடைய மிகவும் புகழ் பெற்ற இடம் சுருளி நீர்வீழ்ச்சியாகும். இவை  150 அடி உயரத்திலிருந்து இரண்டு அடுக்குகளாக விழுந்து கொண்டிருக்கிறது. ஒன்று கீழ் சுருளி என்றும் மற்றொன்று மேல் சுருளி என்றும் அழைக்கப்படுகின்றன. 

சுருளி அருவியில் குளிச்சா எப்படி இருக்கும்...?

மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி நீர்வீழ்ச்சி முதலில் ஒரு குட்டையில் தேங்குகிறது. பின்னர்  அந்த குட்டையை நிரப்பி விட்டு, அதன் பின்னர் சுமார் 40 அடி நீளத்திற்கு கீழ் விழுகிறது  சுருளி அருவி. இந்த அருவிக்கு அருகில் உள்ள இடம் மூலிகைகளின் இருப்பிடமாக உள்ளது.  இங்கு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் அதிகம் குவிகின்றனர்.

சுருளி அருவியில் குளிச்சா எப்படி இருக்கும்...?

சுருளி நீர்வீழ்சியிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சுருளி வேலப்பர் கோவில், சிவன் கோவில் மற்றும் கைலாய குகையும் உள்ளன. இங்கு உள்ள கைலாய குகையில் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.   மேற்கு மலைத் தொடர்ச்சியின் ஒரு பகுதியாக உள்ள இந்த இடம் இந்துக்களின் இடமாக கருதபடுகிறது. இந்த சுருளி நீர் வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் இறந்தவர்களுக்கான இறுதிக்கடன்களில் ஒன்றான புண்ணியா தானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகிறது. 

சுருளி அருவியில் குளிச்சா எப்படி இருக்கும்...?

இங்கு சித்திரை முதல் நாள், தை பூசம், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற முக்கிய விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு உள்ள வேலப்பர்  கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையினரால் திருவிழா நடத்தப்படுகிறது.   சுருளி மலை நீர்வீழ்ச்சிப் பகுதியில், ஸ்ரீ கைலாசலிங்க பர்வதவர்த்தினி திருக்கோயில் என்ற பெயரில் ஒரு கோவில் அமைத்துள்ளது. இந்தக் கோவிலில் மிகப்பெரிய லிங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் முன்பு பர்வதவர்த்தினி சிலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

சுருளி அருவியில் குளிச்சா எப்படி இருக்கும்...?

இந்தச் சிலைகளின் முன்பாகவும், பின்புறமும் வலது மற்றும் இடது பகுதிகளிலும் சுமார் ஆயிரத்து ஐநூறு லிங்கங்கள் சிறியதும் பெரியதுமாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் ஒரு கோடி லிங்கம் வரை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்த லிங்கம் அமைப்பிற்கு யாரும் உதவலாம் என்று இந்தக் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

சுருளி அருவியில் குளிச்சா எப்படி இருக்கும்...?

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டின் எல்லா நாட்களிலும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும்.  திராட்சைத் தோட்டங்கள் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான சுருளி மலைச் சாரல் பகுதியில் பல ஏக்கர் நிலங்களில் உருவாக்கப்பட்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

சுருளி அருவியில் குளிச்சா எப்படி இருக்கும்...?

இங்கு உற்பத்தி செய்யப்படும் திராட்சை பழங்கள் தமிழ்நாடு தவிர அருகிலுள்ள கேரளா , கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இப்படி பல சிறப்புகளை உடைய சுருளி அருவியை காண தேனிக்கு வருபவர்கள் முதலில் இந்த நீர்வீழ்ச்சியை தான் ரசிக்கின்றனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகிறார்கள்.  தேனி மாவட்டத்தின் வனத்துறைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் பாதுகாப்பாக குளிப்பதற்கு தகுந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. பெண்கள் குளித்து முடித்த பிறகு உடை மாற்றிக் கொள்வதற்கு நீர்வீழ்ச்சி அருகிலேயே தனித்தனி அறைகள் உள்ளன.  

Trending News

Latest News

You May Like