இந்த திட்டம் பற்றி தெரியுமா ? பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்கும் அரசு..!

மோடி அரசு கடந்த 2023ஆம் ஆண்டில் பெண்களுக்காக லக்பதி தீதி யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கியது. தொழில் துறையில் பெண்களை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். தொழில் தொடங்க பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டி இல்லாமல் அரசு கடன் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு பெண்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்தத் திட்டம் சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்களுக்காக நடத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதில் அரசிடம் உதவி பெறலாம். மேலும், பெண்கள் இத்திட்டத்தின் மூலம் சுயதொழில் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பின்னர் சொந்தமாகத் தொழில் தொடங்க ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 3 கோடி பெண்களை லக்பதி தீதி யோஜனாவுடன் இணைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
லக்பதி தீதி யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க பெண்கள் சில தகுதி அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான நிபந்தனை என்னவென்றால், இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் விண்ணப்பித்தால் அவரது குடும்பத்தில் வேறு யாரும் அரசு வேலையில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அந்தப் பெண்கள் லக்பதி தீதி திட்டத்தின் பலனைப் பெற முடியாது.
அதேபோல, விண்ணப்பிக்கும் பெண் இருக்கும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்யும் பெண்கள் மட்டுமே லக்பதி தீதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும். ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பெண்கள் இந்தத் திட்டத்திற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்.
லக்பதி தீதி யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க பெண்கள் சுயஉதவிக் குழுவின் கீழ் தொழில் தொடங்குவது குறித்து தெரிவிக்க வேண்டும். அவர்களின் திட்டம் தயாரான பிறகு, அந்தத் திட்டம் சுயஉதவிக் குழுவால் அரசுக்கு அனுப்பப்படும். உடனே அரசு அதிகாரிகள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்வார்கள். அதன் பிறகு விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் லக்பதி தீதி திட்டத்தின் பலன் பெண்களுக்கு வழங்கப்படும். மேலும் அதன் கீழ் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.
லக்பதி தீதி யோஜனா திட்டத்தின் பலன்களைப் பெற உங்களிடம் ஆதார் கார்டு, பான் கார்டு, வருமானச் சான்றிதழ், வங்கி பாஸ்புக், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் நம்பர் போன்ற முக்கியமான ஆவணங்கள் இருக்க வேண்டும். இது பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டை மேம்படுத்துவதற்கான அரசின் லட்சியத் திட்டமாகும். எனவே இந்தத் திட்டத்தில் பெண்கள் பயன்பெறலாம்.