இந்த திட்டம் பற்றி தெரியுமா ? வீட்டிற்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு நிதி உதவி!

ஸ்வச் பாரத் மிஷன் – நகர்ப்புறம் 2.0. திட்டத்தின் மூலமாக நகர்புறங்களில் உள்ள கழிவறைகளே இல்லாத வீடுகளில் புதிதாக கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ6,667 நிதி உதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் சமூக கழிப்பறைகள், பொது கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்துமே செய்து கொடுக்கப்படும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் மற்றும் வருமான சான்றிதழ் இவைகளை வைத்திருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு விருப்பம் உள்ளவர்கள் https://digilocker.meripehchaan.gov.in/ என மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.