1. Home
  2. தமிழ்நாடு

கொடைக்கானல் போகும் வழியில் உள்ள ”வெள்ளி நீர் வீழ்ச்சி பற்றி தெரியுமா ?

1

கொடைக்கானல் போகும் வழியில் உள்ள ”வெள்ளி நீர் வீழ்ச்சி” என்ற ஆறுதான் மஞ்சளாறு என்று அழைக்கப்படுகிறது.இவை 57 அடி முழு கொள்ளளவு கொண்டது. 

மஞ்சளாறு அணை, பழனி மலைகளில் உருவாகி, கிழக்கு நோக்கிப் பாய்ந்து குன்னுவாரன்கோட்டை அருகே வைகையில் கலக்கிறது. மஞ்சளாறு அணையின் இடையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு சில ஆறுகளும் சேருகின்றன. தேவதானப்பட்டி மக்கள் எங்கள் பகுதியில் அணைக்கட்டினால் குடிநீர் மற்றும் விவசாயம் பாசனவசதி பெரும் என்று காமராஜரிடம் கேட்டார்கள்.  மூலாறு, வறட்டாறு, தலையாறு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது.

மஞ்சளாறு அணையில் அப்படி என்ன விசேஷம்...?

அணையில் தேங்கும் நீர் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 10க்கும்மேற்பட்ட கண்மாய்களில் நீர் தேக்கப்பட்டு 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகின்றன. தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, கணவாய்ப் பட்டி, வத்தலக்குண்டு, கட்டகாமன்பட்டி, பழைய வத்தலக்குண்டு, கரட்டுப் பட்டி, குன்னுவாரன் கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள விவசாயிகள் பாசனவசதி பெறுகின்றன. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.  

மஞ்சளாறு அணையில் அப்படி என்ன விசேஷம்...?

மஞ்சளாறு அணை மூலம் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதியில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. பெரியகுளம் போகும் ரோட்டின் இருபுறங்களிலும் வெற்றிலை விற்கப்படும். வெற்றிலை அமோகமாக சாகுபடி செய்ததால் வெற்றிலைக்குண்டு என்றும் ஒரு பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.  ஆனால் காலப்போக்கில் அது மருவி வத்தலக்குண்டு என மக்களால் அழைக்கபடுகிறது. ஆங்கிலேயர்கள் பேட்டால குண்டு  என்று அழைத்தார்கள்.  

மஞ்சளாறு அணையில் அப்படி என்ன விசேஷம்...?

வத்தலக்குண்டுக்கு தண்ணீர் தொட்டியை, மூதறிஞர் ராஜாஜி அவர்கள் திறந்து வைத்தார்கள். வத்தலக்குண்டு தண்ணீர் இளநீர் போன்று இருக்கும். மஞ்சளாறு தண்ணீர் மேலே சொல்லப்பட்ட நிலங்களை எல்லாம் செழிக்க வைத்து மீதமுள்ள தண்ணீர் கட்டாத்து அய்யம்பாளையத்தில் வைகையில் சேரும்.  மணிமுத்தாறு, ஆழியாறு முதலான இடங்களில் மீன் குஞ்சுகள் பொதுப்பணித்துறை மூலம் வளர்க்கப்படுகிறது.  இந்த மீன் குஞ்சுகள் மஞ்சளாறு அணையில்  வளர்க்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையில் அப்படி என்ன விசேஷம்...?

அதன்பின்னர் மீன்வளத்துறை கட்லா, ரோகு, மிருகாளி, திலேபியா போன்ற மீன்வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. மீன்களைப் பிடிப்பதற்கு 22 பரிசல்கள் மஞ்சளாறு அணையில் விடப்பட்டுள்ளன. மற்ற அணைகளைக் காட்டிலும் இயற்கையாக எந்த வித ரசாயண கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் கலக்காமல் அருவியில் இருந்து நேரடியாக வருவதால் இங்கு வளர்க்கப்படும் மீன்களை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள். அணையில் பூங்காக்கள் உள்ளன. அணையை சுற்றிலும் மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. மாலைவேளையில் சூரியன் மறையும் காட்சி தண்ணீரிலிருந்து மலையினுள் செல்வது போன்ற தோற்றத்தை உருவாக்கும்.

மஞ்சளாறு அணையில் அப்படி என்ன விசேஷம்...?

அணையின் பின்பகுதி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு காட்டுமாடு, சிறுத்தை புலி, மான் வகைகள் சுதந்திரமாக நடமாடுவதை காணலாம். மஞ்சளாறு அணையில் மற்ற இடங்களை போல் இல்லாமல் இங்கு உணவகங்களோ, கடைகளோ இல்லை. மஞ்சளாறு அணை டம் டம் பாறையிலிருந்து பார்த்தால் தண்ணீர் விழும் காட்சி பிரமிப்பாக இருக்கும்.  மழைக்காலங்களில் மஞ்சளாறு அணைக்கு நீர் ஆதாரமாக உள்ள தலையாறு நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டுவது மிகவும் ரம்மியமாக இருக்கும். டம் டம் பாறையில் இருந்து கீழே உள்ள மஞ்சளாறு அணை நீர் தேங்கிய பகுதிபோக மற்ற இடங்களில்  மரங்கள், செடி கொடிகள் பார்ப்பதற்க்கு பசுமையாக காணப்படும். இரண்டு மலை முகடுகளின் இடையில் நீர் தேங்கியுள்ள  அணையின் அழகை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ஜில் என்ற காற்றை அனுபவித்து செல்கின்றனர். 

Trending News

Latest News

You May Like