பீனா தாஸ் பற்றி தெரியுமா ? மறக்கப்பட்ட வீர பெண்மணி
நாட்டின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு இன்னல்கள், போராட்டங்களுக்கு பிறகு கிடைத்த இந்திய சுதந்திரம், தற்போது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்திய சுதந்திரம், கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த மென்மையான அகிம்சை வழிப் போராட்டங்களால், பெற்றதல்ல. லட்சக்கணக்கான ஆண், பெண்களின் உயிரை விலையாய் கொடுத்துப் பெறப்பட்டதே நம் நாட்டின் சுதந்திரம்.
காந்தியின் வருகைக்கு முன்பாகவே, இந்திய மக்கள் பல்வேறு தலைவர்களின் கீழ், பல போராட்ட வடிவங்களில் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிவந்தனர்.பிரிட்டிஷ் ராஜ்யத்தின் மீது ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்திய முதல் பெண் பீனா தாஸ். இவர் இந்த வரலாற்றை உருவாக்கிய போது அவருக்கு வயது 21.
இவர் பயிற்சியளிக்கப்பட்ட கொலையாளி அல்ல, ஆனால் 21 வயதான பின்னர், வங்காள ஆளுநர் ஸ்டான்லி ஜாக்சன் மீது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டார். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கு எதிரான கிளர்ச்சியைத் தூண்டுவதற்கு துணிச்சலைத் தூண்டிய தைரியமான பெண் தான் பீனா தாஸ். துரதிருஷ்டவசமாக, வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறைந்த பல லட்சியமுள்ள சுதந்திர போராட்ட வீரர்களில் இவரும் ஒருவரானார்.
யார் இந்த பீனா தாஸ் ?
புகழ்பெற்ற பிரம்மோ ஆசிரியரான பெனி மதப் தாஸ், சரளா தேவி ஆகியோருக்கு பெண்ணாக பிறந்தார் பீனா. அவரது மூத்த சகோதரி கல்யாணி தாஸ் கூட ஓர் சுதந்திர போராட்ட வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1928 இல் நிறுவப்பட்ட சத்ரி சங்கம் (மகளிர் மாணவர் சங்கம்) சேர்ந்தவர் இவர். பிப்ரவரி 6 1932ம் ஆண்டு கல்கட்டா பல்கலைகளகத்தில் ஒரு நிகழ்சிக்காக வந்திருந்தார் ஆளுநர் ஸ்டான்லி ஜாக்சன்.
இந்த 21 வயது இளம் பெண் அவள் ஆடையினுள் துப்பாக்கியை ஒளித்து வைத்திருந்ததை யாரும் கண்டறியவில்லை. அங்குள்ள மாணவர்களிடம் மேடையில் பேசி கொண்டிருந்த ஆளுநரை திடீரென்று பீனா மேடைக்கு கீழ் இருந்த படியே சுட்டார். இது அங்கிருந்த அனைவரையும் வியக்க வைத்தது.
இந்த செயலுக்காக பீனா 9 வருடம் சிறையில் அடைக்கபட்டார். அவர் கூறியது, "எனக்கு ஆளுநர் மீது தனிப்பட்ட கோபம் ஏதும் இல்லை. என் நாட்டின் மீது நான் கொண்ட காதல் அளவற்றது. 30 கோடி மக்களை சிறை பிடித்து வைத்திருக்கும் ஆளுநரை நான் கொள்ள முயன்றது என் நாட்டின் சுதந்திரத்திற்காக மட்டுமே" என்று கூறினார் அந்த வீர பெண்மணி.
newstm.in