1. Home
  2. தமிழ்நாடு

மாரடைப்பை தடுக்கும் 5 முக்கிய மீன் வகைகளைப் பற்றி தெரியுமா ?

1

1. சூரை மீன்
சூரை மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்த நாளங்களில் தேங்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

 
2. கானாங்கெளுத்தி மீன்
சுவையாக இருக்கும் கானாங்கெளுத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த மீன் உலகளவில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது, மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கும் திறன் கொண்டது.
 
3. இறையன்  மீன்
இறையன் மீனான டிரவுட் மீன், உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதய ஆரோக்கியத்தைக் காக்க, இந்த மீனை உணவில் அடிக்கடி சேர்த்துகொள்ளலாம்.
 
4. வெங்கணை  மீன்
வெங்கணை மீனில் E.P.A மற்றும் D.H.A எனும் இரண்டு முக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், இதில் வைட்டமின் டியும் அதிகமாக உள்ளது.
 
5. மத்தி மீன்
மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, செலினியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த இது உதவுகிறது.
 
இந்த 5 மீன் வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். 

Trending News

Latest News

You May Like