இந்த பங்கு உங்கிட்ட இருக்கா?.. ரூ.1 லட்சத்துக்கு ரூ.1.97 கோடி கொடுத்த பங்கு..!

டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் பல்வேறு துறைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நிலையான பேக்கேஜிங் தீர்வுகளை வழங்கும் முன்னணி உற்பத்தியாளர்களில் ஒருவர். இந்நிறுவனம் மடிப்பு அட்டைப்பெட்டிகள், லித்தோ லேமினேஷன் மற்றும் பிளாஸ்டிக் அட்டைப்பெட்டிகள் உள்ளிட்ட பேக்கேஜிங் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
நேற்று தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவன பங்கின் விலை ரூ.4150.50ஆக இருந்தது. 16 ஆண்டுகளுக்கு முன் இப்பங்கின் விலை ரூ.21ஆக இருந்தது. கடந்த 16 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமார் 19,650 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது.
16 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இந்நிறுவன பங்கில் ரூ.1 லட்சம் முதலீடு செய்து இருந்தால் அது இன்று ரூ.1.97 கோடியாக உயர்ந்திருக்கும். அதேசமயம் குறுகிய கால அடிப்படையில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு சுமாரான ஆதாயத்தையே வழங்கியுள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 86 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இந்நிறுவன பங்கின் விலை 27.32 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை டிசிபிஎல் பேக்கேஜிங் லிமிடெட் பங்கு விலை 26.48 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.