1. Home
  2. தமிழ்நாடு

இந்த ரேஷன் கார்டு உங்ககிட்ட இருக்கா..? அப்போ பாதி விலைக்கு சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு..!

1

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200, ஒன்றிய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400 என கட்டணத்தை குறைத்து ஒன்றிய அரசு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண சலுகை கடந்த மாதம் 30-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டை வைத்திருப்பவர்களுக்கு 428 ரூபாய்க்கு சிலிண்டர் கிடைக்கும் என்று கோவா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அம்மாநில சிலிண்டர் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் ஒன்றிய அமைச்சர் ஷிர்பாட் ஒய் நாயக் ஆகியோர் பனாஜியில் எல்பிஜி சிலிண்டர் நிரப்புவதற்கான முதல்வரின் நிதி உதவித் திட்டத்தை தொடங்கினர். இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தின் அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைதாரர்களுக்கு மாநில அரசால் சிலிண்டருக்கு ரூ. 275 மானியம் வழங்கப்படும்.

இதுகுறித்து கோவா முதல்வர் கூறுகையில், “எல்பிஜி சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என பிரதமர் மோடி முன்னதாக அறிவித்தார். உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ரூ. 200 ஒன்றிய மானியம் வழங்கப்படுகிறது. இது தவிர, AAY ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாதம் 275 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்” என்றார்.

Gas

கோவாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் AAY (அந்தியோதயா) அட்டை வைத்துள்ளனர். அத்தகைய அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.200 உஜ்வாலா யோஜனா மானியத்தையும், கோவா அரசால் வழங்கப்படும் ரூ.275 மானியத்தையும் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.475 மானியம் வழங்கப்படும்.

ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சிலிண்டரின் விலை ரூ. 200 குறைக்கப்பட்டதை அடுத்து, பனாஜியில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.903 ஆக குறைந்துள்ளது. அதேசமயம், தெற்கு கோவாவில் சிலிண்டர் விலை ரூ.917 ஆக இருக்கிறது. அனைத்து மானியங்களையும் சேர்த்தால் அங்கு சிலிண்டர் விலை ரூ.428 ஆக குறைந்துள்ளது.

Trending News

Latest News

You May Like