உங்கள் வாகனத்தில் ஃபாஸ்டாக் இருக்கா ? உடனே செய்யுங்க..! இன்று தான் கடைசி நாள்..!

உங்கள் வாகனத்தில் ஃபாஸ்டாக் (Fastag) இருந்தால், அதன் KYC விதிமுறையை ஜனவரி 31க்குள் செய்து விடுங்கள்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தவெளியிட்ட அறிக்கையில் மின்னணு கட்டண வசூல் அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனவரி 31 க்குப் பிறகு, KYC விதிகளை நிறைவேற்றாத ஃபாஸ்டேக்குகள் வங்கிகளால் செயலிழக்கப்படும் அல்லது தடைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று கூறியது.
உங்கள் ஃபாஸ்டேக் கணக்கு முடக்கப்பட்டால், ஃபாஸ்டாக் மூலம் நீங்கள் கட்டணம் செலுத்த முடியாது. அதே நேரத்தில், ஃபாஸ்டாக் இல்லாமல், நீங்கள் டோலுக்கு இரட்டை வரி செலுத்த வேண்டியிருக்கும். KYC இல்லாத ஃபாஸ்டாக் ஜனவரி 31க்குப் பிறகு வங்கிகளால் முடக்கப்படும் அல்லது தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி ஒரு வாகனத்திற்கு பல ஃபாஸ்டாக்கள் வழங்கப்பட்டதாகவும் KYC இல்லாமல் ஃபாஸ்டாக் வழங்கப்படுவதாகவும் சமீபத்திய அறிக்கைகளைத் தொடர்ந்து NHAI இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பல வாகனங்களுக்கு ஒற்றை ஃபாஸ்டாக்-ஐ பயன்படுத்துவதையோ அல்லது ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் பல ஃபாஸ்டாக்களை இணைப்பதையோ பயனர் நடத்தையை ஊக்கப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.