சக்கரை நோய் இருக்கா ? அப்போ நீங்கள் தேங்காய் பூ சாப்பிடலாமா ?
தேங்காய் பூ உடலுக்கு அப்படி என்ன நன்மைகளை வழங்குகிறது என்பதை இக்கட்டுரையில் சற்று விரிவாக காண்போம் வாருங்கள்.
1. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடலைத் தாக்கும் பல்வேறு வகையான நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடத் தேவையான ஆற்றலை நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு வழங்குகிறது. குறிப்பாக இதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல், ஆன்டி-வைரல், ஆன்டி-பராசிடிக் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளை தீங்கு விளைவிக்கும் நோய்களை தடுப்பதன் மூலம், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
2. எடையை குறைக்க உதவும்
நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால், தேங்காய் பூ சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இது நீண்ட நேரம் பசியுணர்வைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இதில் கலோரி மிகவும் குறைவு என்பதால், இது உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும். எனவே எடையைக் குறைக்க நினைப்போருக்கு இது ஒரு சிறந்த உணவுப் பொருள்.
3. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோயாளிகள் தேங்காய் பூவை அச்சமின்றி சாப்பிடலாம். சொல்லப்போனால் இதை சர்க்கரை நோயாளிகளுக்கு நண்பன் என்றே சொல்லலாம். ஏனெனில் இது உடலில் அதிகப்படியான இன்சுலினை உற்பத்தி செய்ய உதவி புரிந்து, சர்க்கரை நோயின் ஆபத்தான பக்கவிளைவுகளை குறைக்க உதவுகிறது. அதுவும் ஏற்ற இறக்கமான இரத்த சர்க்கரை அளவைக் கொண்டிருந்தால், இந்த தேங்காய் பூவை சாப்பிட, உடனே கட்டுக்குள் வந்துவிடும்.
தேங்காய் பூ செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து எடை இழப்பிற்கு உதவுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. எனவே செரிமான பிரச்சனையைக் கொண்டவர்கள் இதை சாப்பிட, செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.
4.புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்கும்
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்படியானால் தேங்காய் பூ சாப்பிடுங்கள். ஏனெனில் இது புற்றுநோயின் அபாயத்க் குறைக்கிறது. ஏனெனில் இது ப்ரீராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை திறம்பட தடுக்கின்றன. இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதோடு, இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய புற்றுநோயையும் தடுக்கிறது.
நீங்கள் நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க விரும்புகிறீர்களா? உங்கள் தலைமுடியும், சருமமும் நீண்ட நாட்கள் அழகாக ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்படியானால் தேங்காய் பூ சாப்பிடுங்கள். இது சருமத்தில் தோன்றும் முதுமைக் கோடுகள், சரும சுருக்கங்கள், முதுமை புள்ளிகள் மற்றும் தளர்ந்த சருமம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, நீண்ட காலம் உங்களை இளமையாக வைத்திருக்கும்.