1. Home
  2. தமிழ்நாடு

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா ? அப்போ உங்களுக்கு வெங்காயம் 1 கிலோ 25 ரூபாய் தான்..!

1

வெங்காயத்தின் விலையானது தற்பொழுது அதிகரித்து வருகிறது. வெங்காயம் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்று வந்த நிலையில் தற்போது 100 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

இவ்வாறு உணவு பொருட்களின் விலைவாசியின் ஏற்ற இறக்கத்தால் மக்கள் பெருமளவு அவதிப்பட்டு வருகின்றனர்.பாமர மக்கள் காய்கறிகளை வாங்கி சமைக்க முடியாத அளவிற்கு நிலைமை வந்துவிட்டது. இதனை தடுக்க தற்பொழுது பஞ்சாப் அரசானது புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அதாவது காய்கறி மண்டியில் ஆதார் அட்டை கொண்டு வந்து காட்டினால் போதும் அவர்களுக்கு மலிவு விலையில் ரூபாய் 25 க்கு வெங்காயம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பால் பஞ்சாப் மாநில மக்கள் பெரும்பளவு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அது மட்டுமின்றி மக்கள் பலர் காய்கறி மண்டிக்கு சென்று ஆதார் அட்டையை காட்டி மேற்கொண்டு வெங்காயத்தை வாங்கியும் செல்கின்றனர். தற்பொழுது இந்த திட்டமானது குறிப்பிட்ட சில மண்டிகளில் நடைமுறையில் உள்ள நிலையில் விரைவில் அனைத்து இடங்களிலும் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளனர்.

இதேபோல இதர மாநிலங்களில் காய்கறி வெங்காயம் உள்ளிட்டவைகளின் விலை உயரும்போது இதே போல திட்டம் கொண்டு வந்தால் நல்லா இருக்கும் என மக்கள் கூறி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like