உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா ? புதிய வசதி அறிமுகம் – அரசு அறிவிப்பு!
மக்கள் அனைவருக்கும் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கு உங்களுடைய ஆதார் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஆதார் அட்டையை 10 ஆண்டுகள் வரை புதுப்பிக்காமல் இருந்தால் உங்களுக்கு இந்த வசதிகள் கிடைக்காது.
மேலும் மக்கள் 10 வருட ஆதார் அட்டையை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி டிசம்பர் 14,2023 க்குள் செய்து முடிக்க வேண்டும். மேலும் இதற்கு முன்னதாக ஆதார் அப்டேட் செய்ய ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் தற்போது அரசு அதை ரத்து செய்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் இ சேவை மையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால் அப்டேட் செய்வதில் சற்று தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் தகவல் வெளியாகி இருக்கிறது.