1. Home
  2. தமிழ்நாடு

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா.. இதை செய்யாவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம்..!

1

பான் கார்டு ஐடிஆர் தாக்கல் செய்வதற்கு மட்டுமல்லாமல், வங்கி, முதலீடு, சொத்து வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், கடன் வாங்குதல் போன்ற முக்கியமான நிதிப் பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒருவரின் பான் கார்டு (PAN Card) ஆக்டிவ் ஆக இல்லாத நிலையில், அவர் அதை மீண்டும் ஆக்டிவேட் என்றால், வருமான வரித் துறையால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா இல்லையா என்பதை வீட்டிலிருந்தே எளிதாகச் சரிபார்க்கலாம். இதற்காக, நீங்கள் வருமான வரித் துறையின் மின்னணு-தாக்கல் e-Filing வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு, கீழே உள்ள “Quick Links” அல்லது “Instant e-Services” பிரிவில் “Verify Your PAN” என்ற விருப்பத்தைக் காண்பீர்கள். இங்கே நீங்கள் உங்கள் பான் எண், முழுப் பெயர், பிறந்த தேதி மற்றும் பான் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, உங்களுக்கு ஒரு OTP கிடைக்கும். அதை உள்ளிட்ட பிறகு, உங்கள் பான் ஆக்டிவ் ஆக உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் பார்க்க முடியும்.

உங்கள் பான் அட்டை ஆக்டிவ் ஆக இல்லை என்றால், முதலில் அது உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். அது இணைக்கப்படவில்லை என்றால், உடனடியாக அதை இணைக்கவும். சில நேரங்களில் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தாலும், ஆக்டிவ் ஆக இல்லாமல் இருக்கலாம். எனவே ஒரு முறை பான் அட்டை நிலையைச் சரிபார்க்கவும்.

உங்களிடம் இரண்டு பான் அட்டைகள் இருந்தால் அல்லது தவறுதலாக இரண்டு எடுக்கப்பட்டிருந்தால், அவற்றில் ஒன்றை நீங்கள் ஒப்படைக்க வேண்டும். உங்களிடம் ஒரே ஒரு பான் கார்டு மட்டும் தான் இருக்கலாம். இரண்டு பான் கார்டுகளை வைத்திருக்க சட்டத்தில் இடம் இல்லை. பான் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால், அதைத் திருத்த வேண்டும். அதற்கு பதிலாக புதிய கார்டுக்கு விண்ணபித்தால், அந்த நபரிடம் இரு பான் அட்டைகள் வந்துவிடும். PAN அட்டை பெற விண்ணப்பித்திருந்த நிலையில், சரியான நேரத்தில் வராமல் இருந்து, மீண்டும் அதற்கு விண்ணப்பித்திருக்கலாம். இதன் காரணமாகவும் இரண்டு பான் கார்டுகள் இருக்கலாம். 

இரண்டு பான் கார்டுகளுடன் பிடிபட்டால், வருமான வரித்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். எனவே, சிக்கல்களை தவிர்க்க இரண்டு பான் அட்டைகள் இருந்தால், NDL அல்லது UTIITSL வலைத்தளத்திலிருந்து, கார்டை ஒப்படைப்பதற்கான கோரிக்கையைச் செய்யலாம். பான் தொடர்பான பிரச்சினை ஏதும் வராமல் இருக்க, இப்போது உங்கள் பான் நிலையைச் சரிபார்க்கவும். ஒரு சிறிய அலட்சியம் உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும்.

Trending News

Latest News

You May Like