1. Home
  2. தமிழ்நாடு

உங்க கையில இருக்குறது நல்ல நோட்டா, கள்ள நோட்டா..? கண்டுபிடிக்க இந்த ஒரு ஆப் இருந்தால் போதும்..!

1

சந்தையில் போலி ₹500 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கிறது. CBI, SEBI, NIA போன்ற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ₹500 நோட்டுகளைப் பெறும்போது கவனமாக இருக்க வேண்டும். சிறிய எழுத்துப் பிழையைக் கொண்டு போலி நோட்டுகளைக் கண்டறியலாம்.

போலி நோட்டுகளைக் கண்டறிய MANI (மொபைல் உதவியுடன் நோட்டு அடையாளங்காட்டி) என்ற செயலியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.


RBI மொபைல் பயனர்களுக்காக MANI (Mobile Aided Note Identifier) என்ற பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி Android மற்றும் iOS இரண்டிலும் இலவசமாகக் கிடைக்கிறது. உங்கள் தொலைபேசியில் இந்த கள்ள நோட்டு கண்டறியும் செயலியை பதிவிறக்கி திறக்கவும். தொலைபேசியின் கேமராவை ஆன் செய்து 500 ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்யவும். இந்த செயலி உடனடியாக அந்த நோட்டு அசலா அல்லது போலியானதா என்பதைச் சொல்லும். இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த செயலி ஆஃப்லைனிலும் செயல்படுகிறது. மேலும் சற்று கிழிந்த அல்லது பழைய நோட்டையும் கூட அடையாளம் காண உதவுகிறது.

அசல் ரூபாய் நோட்டில் சில சிறப்பு அடையாளக் குறிகள் உள்ளன. நோட்டின் நடுவில் ஒரு பளபளப்பான கோடு இருக்கும். அதில் 'Bharat' மற்றும் 'RBI' ஆகியவை எழுதப்பட்டு இருக்கும். நோட்டை சற்று மடிக்கும்போது அதன் நிறம் மாறுவதைக் காணலாம். ரூபாய் நோட்டில் உள்ள காந்திஜியின் புகைப்படத்திற்கு அருகில் ஒரு வாட்டர் மார்க் இருக்கும். இதனை வெளிச்சத்தில் காணலாம். காந்திஜியின் கண்ணாடி மற்றும் சில பகுதிகளில் 'RBI', 'Bharat' மற்றும் '500' ஆகியவை மிகச் சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும். இதனை புகைப்படம் எடுத்து ஜூம் செய்து பார்ப்பதன் மூலம் அல்லது கண்களால் உற்றுப் பார்ப்பதன் மூலம் அவற்றை அடையாளம் காணலாம்.


உங்கள் தொலைபேசி மூலம் UV சோதனை செய்யுங்கள்

உங்கள் ஸ்மார்ட்போனை UV விளக்காகப் பயன்படுத்தி அடையாளம் காணலாம். தொலைபேசியின் ஃபிளாஷில் ஒரு நீலம் அல்லது ஊதா நிற ட்ரான்பரெண்ட் பிளாஸ்டிக் துண்டை வைக்கவும். இப்போது ஃபிளாஷை இயக்கி ரூபாய் நோட்டை பாருங்கள். இதனால், ரூபாய் நோட்டில் இருக்கும் நூல் அல்லது சீரியல் எண் வெளிர் நீலம் அல்லது பச்சை நிற ஒளியில் பிரகாசிக்கத் தொடங்கும். இந்த முறை 100% சரியானதாக இருக்கும் என உறுதி அளிக்க முடியாது. ஆனால் ஓரளவு பயனுள்ளதாக இருக்கும்.

இன்றைய டிஜிட்டல் சகாப்தத்தில், கள்ள நோட்டுகளிய அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் அல்ல. கொஞ்சம் புரிதலுடன் ஸ்மார்ட்போனின் உதவியுடன், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை எளிதாக அடையாளம் காணலாம். எனவே இன்றே MANI செயலியைப் பதிவிறக்கம் செய்து ரூபாய் நோட்டுகளை நீங்களே அடையாளம் காணவும்.

Trending News

Latest News

You May Like