1. Home
  2. தமிழ்நாடு

பெண் குழந்தை உள்ளவரா நீங்கள்..? மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம்

1

பிரதமர் மோடியால் 2015 ஜனவரி 22ம் தேதி சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் துவங்கப்பட்டது. இது இந்தியாவில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என்றழைக்கப்படுகிறது. இத்திட்டம் 18 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தைகளுக்காக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமணத்திற்கு உதவுவது ஆகும். இத் திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் 10 வயதுக்கு கீழுள்ள பெண் குழந்தையாக இருப்பது அவசியமானது ஆகும்.

பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலரால் ரூ.1000 வைப்புத்தொகையுடன் இந்த விவரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் சுகன்யா சம்ரித்தி கணக்கை தபால் நிலையத்திலோ அல்லது RBI அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளிலோ தொடங்கலாம். இத்திட்டம் திறக்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படுகிறது.

 பெண் குழந்தைகள் மட்டுமே சுகன்யா சம்ரிதி கணக்கு வைத்திருக்க தகுதியுடையவர்கள் ஆவர். சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் ஒரு பெற்றோர் அதிகபட்சமாக இரண்டு கணக்குகளைத் திறக்கலாம். ஒவ்வொரு மகளுக்கும் ஒன்று (இரண்டு மகள்கள் இருந்தால்). முதல் அல்லது இரண்டாவது பிரசவத்தில் இருந்து இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தால், பெற்றோர் மூன்றாவது கணக்கைத் திறக்க இந்தத் திட்டம் அனுமதிக்கிறது. கணக்கு தொடங்கும் போது, பெண் குழந்தை 10 வயதுக்கு குறைவாக இருப்பது அவசியம். SSY கணக்கைத் தொடங்கும் போது, பெண் குழந்தையின் வயதுச் சான்று கட்டாயமாகிறது.

 2019 இன் விதிகளின் படி, கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை SSY கணக்கில் டெபாசிட் செய்யலாம். SSY கணக்கைத் திறக்கும் தேதியின்படி 10 வயது நிரம்பாத பெண் குழந்தையின் பெயரில் பாதுகாவலர்/பெற்றோர் ஒருவரால் திறக்க முடியும்.உதாரணமாக, உங்கள் பெண் குழந்தைக்கு 9 வயதாக இருக்கும் போது, ​​நீங்கள் ஒரு SSY கணக்கைத் திறந்தால், 15 ஆண்டுகளுக்கு, அதாவது 24 வயதை அடையும் வரை அந்தக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முதிர்ச்சியடையும். அதாவது, பெண் குழந்தைக்கு 9 வயதாக இருக்கும்போது கணக்கு தொடங்கப்பட்டால், கணக்கு 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும், அதாவது அந்த பெண்ணுக்கு 30 வயதை அடையும் போது முதிர்வு தொகையை பெறலாம்.

ஒரு SSY கணக்கை பெண் குழந்தைக்கு 18 வயதை அடையும் வரை மட்டுமே பாதுகாவலர் அல்லது அவரது பெற்றோரால் தொடர முடியும், பதினெட்டு வயதை அடைந்த பிறகு, தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கு வைத்திருக்கும் பெண்ணே அந்த கணக்கை நிர்வகிக்கலாம். அதேப்போல கணக்கு வைத்திருப்பவரின் கல்வி நோக்கத்திற்காக SSY கணக்கில் உள்ள தொகையில் 50% வரை திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. அதே சமயத்தில் இந்த திட்டத்தின் கீழ் கடன் வசதி கிடையாது.

1 ஆண்டுகள் முடிவதற்குள் SSY கணக்கை முன்கூட்டியே மூடுவதற்கு கணக்கு வைத்திருப்பவர் திருமணத்தின் காரணமாக அத்தகைய கோரிக்கையுடன் விண்ணப்பித்தால் அனுமதிக்கப்படும். கணக்கு வைத்திருக்கும் பெண்ணிற்கு திருமணம் நடந்த நாளிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்பு அல்லது திருமணமான தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் கணக்கை முடித்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதங்களுக்கு பிறகு கணக்கை முடிக்க அனுமதிக்கப்படாது. தற்போது, சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தத் தொகைக்கும், ஐடி சட்டம், 1961ன் 80சியின் கீழ் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும்.

பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அவர்களது பெயரில் கணக்கு துவங்கி 1000 ரூபாயை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். இந்த வைப்பு தொகையானது ஆண்டுக்கு ஒரு முறையென 21 ஆண்டுகள் பெறப்படும். முதலீட்டாளர்கள் 1000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை வைப்பு தொகையாக செலுத்த இயலும். இவ்வாறு சேமிக்கப்படும் வைப்பு தொகைக்கு அரசு சார்பாக ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படும். இதற்கு வரிவிலக்கு உண்டு. இந்த தொகையை 21 ஆண்டுகளுக்கு பிறகு அல்லது 18 வயது பூர்த்தி அடைந்த பிறகு தங்களது திருமணத்திற்கு, உயர் கல்விக்காக பயனர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like