1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைன் விளையாட்டிற்காக இப்படி கூட செய்வீங்களா ?சாவிக்கொத்து, கத்தி , நகவெட்டிகளை விழுங்கிய இளைஞர்..!

1

கடந்த சில நாட்களுக்கு முன் பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர் (22) வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் ஆன்லைன் மொபைல் கேமை இடைவிடாமல்  விளையாடி வந்ததால், அவரது குடும்பத்தினர் மொபைல் போனை புடுங்கி வைத்து கேம் விளையாட அனுமதி மறுத்தனர்.

ஆத்திரமடைந்த சாவிக்கொத்து, 2 நகவெட்டிகள், கத்தி ஆகிய பொருட்களை அடுத்தடுத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலில் அவருக்கு ஒன்றும் செய்யவில்லை என்றால், சில மணிநேரங்கள் கழித்து அவரது உடல்நிலை மோசமடைந்தது.இதனையடுத்து வலியால் துடிக்க தொடங்கியதும், அவரது குடும்பத்தினர் மோதிஹாரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு எக்ஸ்ரே மூலம் அவரது வயிற்றில் கூர்மையான பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த நபருக்கு 1.5 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு வயிற்றில் இருந்த பொருட்களை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினர். அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like