உங்கள் ஏரியா ரேஷன் கடை திறந்துள்ளதா அல்லது மூடியுள்ளதா தெரிஞ்சிக்க இதை பண்ணுங்க..!
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் தற்பொழுது நவீன மையமாக்கப்ப்ட்டு வருகிறது. இதில், பலருக்கும் வாங்காத பொருட்களை வாங்கியதாக மெசேஜ் வருவதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற குளறுபடிகளை தடுக்க தமிழக அரசு கருவிழி திட்டத்தை செயல்படுத்தியது. இதன் மூலம் மக்கள் தங்கள் கருவிழியை பயன்படுத்தி மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி வந்தனர். இதன் மூலம் எந்தவொரு குளறுபடிகளும் இதுவரை ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது ரேஷன் கடைகளில் இருக்கும் பொருட்கள் மற்றும் மற்ற விவரங்களை எஸ்எம்எஸ் மூலம் தெரிந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி,
- முதலில் 9773904050 என்ற எண்ணுக்கு PDS 101 என்று அனுப்பினால் நியாய விலைக் கடையில் உள்ள பொருள் விவரங்கள் தெரியும்.
- அதன்பிறகு, நியாய விலைக் கடை திறந்துள்ளதா அல்லது மூடியுள்ளதா என்பதை அறிய PDS 102 என்ற மெசேஜை 9773904050 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.