இதை செய்யலனா !! பெட்ரோல், டீசல் கிடையாது.

இதை செய்யலனா !! பெட்ரோல், டீசல் கிடையாது.

இதை செய்யலனா !! பெட்ரோல், டீசல் கிடையாது.
X

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு மே 3 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வருபவர்கள் முககவசம் அணிந்து வர வேண்டும் என உத்திரவிட்டுள்ளது.

இந்நிலையில் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் ; முகக் கவசம் அணியாவிட்டால் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் , டீசல் வழங்கப்படாது என்று அனைத்து இந்திய பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பெட்ரோல் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 365 நாட்களும் பெட்ரோல் நிலையங்கள் திறந்திருக்கின்றன. அத்தியாவசிய சேவைகள் என்று அரசு அனுமதித்துள்ள நிலையில், தொடர்ந்து ஊழியர்கள் வாடிக்கையாளர்களை சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய சூழலில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களால் தொற்று பரவும் என்பதால் முகக்கவசம் இல்லையெனில் பெட்ரோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பல தரப்பட்ட மக்களிடம் இருந்து வரவேற்பு அளித்துள்ளது.

Newstm.in

Next Story
Share it