1. Home
  2. தமிழ்நாடு

இப்படிப்பட்டவர்களும் இந்த உலகில் வாழ்கின்றனரா? சொந்த தந்தையை அடித்து கொடுமைபடுத்தும் மகள்கள்..!

1

இந்த விடியோவை பார்க்கும் போது இப்படிப்பட்டவர்களும் இந்த உலகில் வாழ்கின்றனரா? என்று கேட்க தோன்றுகிறது. 

இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வரும் அந்த வீடியோவில் தனது மகள்களின் கையால் கொடுமைப்படுத்தப்படும் அந்த நபரின் பெயர், ஹரேந்திர மௌர்யா என்று கூறப்படுகிறது. இவரை, அவரது மகள்கள் குச்சியை வைத்து அடிக்க, ஹரேந்திராவின் மனைவி அவரது கால்களை அழுத்தமாக பிடித்து வைத்துக்கொள்கிறார். அதே போல, அந்த வீடியோவில் ஹரேந்திரா வலி தாங்க முடியாமல் கத்துவதும்-கதறுவதும் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அடித்துக்கொண்டிருக்கும் அந்த பெண்ணின் தம்பி, அதனை நிறுத்த முயற்சி செய்கிறார். ஆனால் அந்த பெண்ணோ, உனக்கும் அடி விழும் என்று மிரட்டுகிறார். இவர்களின் பிடியில் இருந்து தப்பிக்க அடி வாங்கும் அந்த வயதானவர் எவ்வளவோ முயற்சி செய்கிறார். ஆனால் அவரை அவரது மனைவி பிடித்ததை விடவே இல்லை. இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு நெட்டிசன்கள் பலர் இணையத்தில் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.



 

Trending News

Latest News

You May Like