1. Home
  2. தமிழ்நாடு

பாம்புகள் அடிக்கடி கனவில் வருகிறதா..? இன்று விரதம் இருங்கள்..!

1

பாம்புகளை தெய்வமாக வழிபடும் வழக்கம் இந்துக்களிடையே உண்டு. சிவ பெருமான், முருகப் பெருமான், அம்பாள், விநாயகர், திருமால் ஆகியோர்களுடன் நாகம் காட்சி தருவதை காண முடியும். இது தவிர நாக தேவதையாகவும், ராகு - கேது என நவகிரக வடிவிலும் பாம்புகளை வழிபடுவது வழக்கம்.

புற்றுக்கு பால், முட்டை வைத்து வழிபடுவது. மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுவது, நாகர் சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வது என நாக வழிபாடு என்பது பல நூறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாகங்களை வாசுகி, ஆதிசேஷன், காலிங்கன் என பல பெயர்களை பக்தர்கள் போற்றி வழிபட்டு வருகின்றனர்.

நாக பஞ்சமி நாளில் அதிகாலையில் எழுந்து, நீராடி, விரதம் இருந்து வழிபாட்டை துவக்க வேண்டும். மஞ்சள், குங்குமம், பால், வெள்ளை நிற மலர்கள் ஆகியவற்றை கோவிலில் உள்ள நாக தெய்வத்திற்கு காணிக்கையாக அளித்து வழிபடலாம். பாலுடன், நெய் மற்றும் சர்க்கரை கலந்து படைத்தும், விளக்கேற்றியும் வைத்து, நாக தேவதையை மனதார பிரார்த்தனை செய்து, நம்முடைய குறைகளை சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும்.

நாக பஞ்சமி நாளில் விரதமிருந்த வழிபட்டால் எந்த பிரச்சனையாக இருந்தால் ஓடி விடும். வெள்ளியில் செய்த நாக உருவங்களை காணிக்கையாக செலுத்துவது மிகவும் விசேஷமானது. நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நாக தோஷத்தால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஆகியோர் வேண்டிக் கொண்டால் நாக தேவதைகளின் அருள் கிடைக்கும்.

பாம்புகளால் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், பாம்புகள் அடிக்கடி கனவில் வருபவர்களும் இந்த நாளில் விரதம் இருந்து வேண்டிக் கொள்ளலாம். இதனால் பாம்புகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like