1. Home
  2. தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா ? உடனே புகாரளிக்கவும்..!

1

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பெரும்பாலான பயணிகள் அரசு பேருந்துகளில் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்து விடுவதால் சிறப்பு பேருந்து டிக்கெட்களும் விரைவில் காலியாகிவிடுகிறது. இதனால், பயணிகள் வேறு வழியில்லாமல் தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்கின்றனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை நாட்களில் இரட்டிப்பு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் பயணிகள் புகாரளிக்கலாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, பண்டிகை அல்லது விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் 9384808393 என்கிற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like