1. Home
  2. தமிழ்நாடு

இவர்கள் எல்லாம் ரேஷன் கடைக்கு நேரில் வர வேண்டாம்! தமிழக அரசு அதிரடி!!

இவர்கள் எல்லாம் ரேஷன் கடைக்கு நேரில் வர வேண்டாம்! தமிழக அரசு அதிரடி!!


ரேசன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பதிலாக அவர்களது சார்பில் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் பொருள்களை வாங்கிச் செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில், வயது மூப்பு காரணமாக நியாயவிலைக் கடைக்குச் சென்று பொருள்களை வாங்க இயலாத அட்டைதாரர்கள், அதற்கான அங்கீகாரச் சான்றை பூர்த்திசெய்து நியாய விலைக்கடை பணியாளரிடம் ஒப்படைக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அட்டைதாரர் சார்பில் உணவுப் பொருட்களைப் பெற அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் விவரம் தவறாது பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை தவிர பிற குடும்ப அட்டைத்தாரர்கள் இந்த வசதியினை தேர்வு செய்ய அனுமதியில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வட்ட வழங்கல் அலுவலர் உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டு, தகுதியுள்ள நபர் உணவுப் பொருள்களை பெறுவதற்கு அனுமதிக்கலாம் என ஆணையர் கூறியுள்ளார். மேலும் அங்கீகரிக்கப்பட்ட நபர் யாருக்காக பொருள் வாங்கவுள்ளாரோ அவர்களது குடும்ப அட்டையை கட்டாயம் எடுத்துச்செல்லவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like