1. Home
  2. தமிழ்நாடு

என் வரியை கொடுத்துட்டு பிச்சை கேட்கணுமா? சீமான் ஆவேச கேள்வி!

1

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெள்ள பாதிப்பைப் பார்வையிட தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். மேலும் அதற்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அப்போது, தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட மத்திய அரசு கூடுதலாக நிதியை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார். 

2014 முதல் 2023 வரை தமிழகத்தில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி ரூ.6.23 லட்சம் கோடி, அதே நேரம் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி என்று தமிழகத்தில் இருந்து பெற்றதை விட கூடுதலாக நிதி கொடுத்துள்ளோம் என்று கூறியிருந்தார். அவருக்கு பதில் கூறும் பொருட்டு இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,  கவர்மெண்ட் நடத்துறீங்களா.. இல்லை கந்து வட்டி நடத்துறீங்களா? மாநிலத்தின் வரியை மாதா மாதம் வசூல் செய்துவிட்டு பின்னர் திருப்பி தருகிறேன் என்றால் என்ன அர்த்தம்? உங்களுக்கு வேலை இல்லையா? இதுக்கு பெயர் நிர்வாகமா? மாநில அரசின் நிதியை வைத்துதான் மத்திய அரசு நடக்கிறது. மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசு நிதி.

மத்திய அரசுக்கு என்று வருவாய் எது? எல்ஐசி இருந்தது அதிலும் 60 பங்கை விற்றாகி விட்டது. மாநிலத்தின் வரியை பெற்று வைத்துக்கொண்டு பேரிடர் காலத்தில் கூட நாங்கள் பிச்சைக் கேட்க வேண்டுமா? இதுவே பீகார், குஜராத், உத்தரப்பிரதேசத்தில் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டிருந்தால் உடளே அள்ளிக் கொடுத்திப்பார்கள். இந்தி பேசினால்தான் இந்தியன் என்றால் எங்களை ஏன் வைத்துள்ளீர்கள்? எங்களுடைய வரிக்காவும் எங்கள் மண்ணின் வளத்திற்காவும் தானே?

எனக்கு ஒரே தாய் தமிழ் தாய். என் நாடு என் மக்கள் என் நிர்வாகம். இதே குஜராத்திலும்,  உத்தர பிரதேசத்திலும் வெள்ளம்  வந்தால்  கேவலமா இப்படியா பேசிட்டு உட்கார்ந்திருப்பீர்கள். உடனே வருவீங்க பறந்து வருவீங்க. அடுத்த நொடி 500 கோடி அறிவிப்பீங்க. அறிவிச்சீங்களா?  இல்லையா? 

நான் ஒரு ரூபாய் கொடுத்தா 40 காசு திருப்பி தருகிறீர்கள். அவன் ஒரு ரூபாய் கொடுத்தால் 3.80 காசு தருகிறார்கள். என் நிலத்தின்  வளத்தை எல்லாவற்றையும் சுரண்டி விட்டீர்கள். இந்தி பேசுபவர்கள் தான் இந்தியர்களா?

பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வந்த அம்மா அவர்கள், சாலையில் ஒரு ஓரத்துல படங்கள் எடுத்துட்டு வந்து அந்த படங்களை பெரிய அளவில் மாட்டி, ஒரு பந்தலை போட்டு அதில் இருந்து பார்த்துட்டுப் போறதுக்கு, அங்கிருந்து வாட்ஸ் அப்பில் அனுப்பி விட்டு இருக்க சொல்லி இருக்கலாமே. எதுக்கு வர்ரீங்க. இதுதான் அவரும் பண்ணாரு. ஒரு இடத்துல படத்தை ஒட்டி வச்சிருந்தாங்க. அவரும் பார்த்துட்டு போயிட்டாரு.

ஈமெயில், இன்ஸ்டாகிராம் இருக்கு, இன்டர்நெட் இருக்கு, வாட்ஸ் அப் இருக்கு. அதுல போட்டு விட சொல்லி பார்க்க வேண்டியது தானே. அங்கிருந்து பார்க்கலாமே. அவங்களுக்கு நாங்க ஒரு உயிரே கிடையாது. நாங்க ஒரு  ஓட்டு அவ்வளவுதான். 

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்தை திறந்து வச்சுட்டு போனாரு. புதிய முனையத்தை திறந்து வைக்க வர முடிந்த பிரதமர் மோடிக்கு தூத்துக்குடிக்கு வர முடியல. தூத்துக்குடி அழிந்து போனதை பார்வையிட முடியல. மக்களுக்காக தான் இந்த  விமான நிலைய விரிவாக்கம்.  மக்கள் செத்துப் போனதுக்கப்புறம் யாரு அதை பயன்படுத்த முடியும் என்று  கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like