முஸ்லீம் என்பதால் எனக்கு வாழ உரிமை கிடையாதா?

முஸ்லீம் என்பதால் கண்ணியத்துடன் வாழ தனக்கு உரிமை கிடையாதா என 62 வயது முதியவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வட மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் உத்தகரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை அதிகம்.
இஸ்லாமியர்கள் இந்தியாவில் இருக்கக்கூடாது என்ற ரீதியில் மத்தியில் ஆளும் பாஜகை சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அதில் உபி மாநிலம் நொய்டாவில் ஒரு கும்பல் இவரை அசிங்கமாக திட்டியும்,தாடியை இழுத்தும்,அரை நிர்வாணமாக்கியும் உள்ளது. இவர் புகார் அளித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.
இதனையடுத்து முஸ்லீம் என்பதால் கண்ணியத்துடன் வாழ தனக்கு உரிமை கிடையாதா என 62 வயது முதியவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
newstm.in