1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING - திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 10,734 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..!

Q

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, இத்தொகுதி இடைத்தேர்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.
திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 29 பேர் போட்டியிட்டனர். அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தது. இத்தேர்தலில் 2.37 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. 82.48 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் பணியில் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட மொத்தம் 150 பேர் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் எஸ்.பி. தீபக் ஸ்வாட்ச் தலைமையில், 4 ஏடிஎஸ்பி, 7 டிஎஸ்பி, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உட்பட மொத்தம் 1,219 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் வழக்கம்போல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 130 வாக்குகளுடன் முன்னிலை பெற்றார். பாமக வேட்பாளர் சி.அன்புமணிக்கு 10 வாக்குகள் கிடைத்துள்ளன. நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 2 வாக்குகள் பெற்றார்.
3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 10,734 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை விட முன்னிலையில் உள்ளார். அன்னியூர் சிவா 18,057 வாக்குகளும், சி.அன்புமணி 7,323 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

Trending News

Latest News

You May Like