திமுக தலைமையிலான கூட்டணியே 38 முதல் 39 இடங்களையும் கைப்பற்றும் - India Today..!

நாட்டில் தற்போது லோக்சபா தேர்தல் நடந்தால் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் India Today-C Voter கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி இருக்கிறது. இந்த கருத்து கணிப்பின் முக்கிய அம்சங்கள்:
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக அணி 39 இடங்களையும் கைப்பற்றியது. அத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு 47% வாக்குகள் கிடைத்தன.2024-ம் ஆண்டு தேர்தலில் ஒரு இடத்திலும் வெல்லாத அதிமுகவுக்கு 23% வாக்குகளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 18% வாக்குகளும் கிடைத்தன.
தற்போது லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் நடந்தால் திமுக அணியே 38 முதல் 39 இடங்களிலும் வெற்றி பெறும். அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.
மேலும் திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 2024-ம் ஆண்டு தேர்தலை விட 5% அதிகரித்து 52% ஆக உயரும்; அதிமுக அணியின் வாக்கு சதவீதம் 3% குறைந்து 18% ஆகவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 3% அதிகரித்து 21% ஆகவும் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் திமுக அணிக்கு அடுத்ததாக 2-வது பெரிய கட்சியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னேறும்; 3-வது இடத்துக்கு அதிமுக தள்ளப்படும்.
தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 343 இடங்களும் இந்தியா கூட்டணிக்கு 188 இடங்களும் கிடைக்கும். 2024-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் பாஜக கூட்டணிக்கு 44 இடங்கள் கூடுதலாகவும் இந்தியா கூட்டணிக்கு 188 இடங்கள் குறைவாகவும் கிடைக்கும். இவ்வாறு India Today-C Voter கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.