1. Home
  2. தமிழ்நாடு

வரும் 28- ம் தேதி திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!

1

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி நடத்தப்படலாம் என்ற உத்தேச தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை என தேர்தல் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே ஜனவரி 28-ம் தேதி முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், காங்கிரஸ் கமிட்டி குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Trending News

Latest News

You May Like