1. Home
  2. தமிழ்நாடு

இன்று திமுக இளைஞரணி மாநாடு... வெளியான மெனு லிஸ்ட்..!

1

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்காகப் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க 5 லட்சத்துக்கும் அதிகமான கட்சியினர் திரண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு நடக்கும் திடலுக்கு நேற்று தனது மகனுடன் சென்ற அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், மாநாடு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

திமுக இளைஞரணி மாநாட்டுத் திடலில் பிரமாண்ட ட்ரோன் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், தமிழ்நாடு, திராவிட தலைவர்கள், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கலைஞரின் கையெழுத்து என வண்ணமயமாக அரங்கேறிய காட்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் வழங்கப்பட உள்ள உணவுக்கான மெனு லிஸ்ட் வெளியாகியுள்ளது. இதில் 5 லட்சம் பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, பிரட் அல்வா, தயிர் சாதம், ஸ்வீட், காலி பிளவர் சில்லி என ஏராளமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் வரவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் சைவ பிரியர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம் என பலவகை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மெனுவை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு போயுள்ளனர். இந்த மாநாட்டுக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Trending News

Latest News

You May Like