1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இன்று திமுக மகளிர் உரிமை மாநாடு..! சோனியா காந்தி - மெகபூபா முப்தி சென்னை வருகை..!

1

தி.மு.க. மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னின்று நடத்தும் இந்த மகளிர் உரிமை மாநாடு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

இந்நிலையில் சென்னையில் நடைபெறும் தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு குறித்து தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

தன் வாழ்நாள் முழுவதும் பெண்களின் முன்னேற்றம், பெண்களுக்கான அங்கீகாரம், பெண் கல்வி என்று தன் ஆட்சி பொறுப்பில் இருக்க கூடிய அந்த கால கட்டத்தில் பல்வேறு திட்டங்களை அதற்காக கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

அவரது நூற்றாண்டில், இப்போது தேர்தல் அடுத்த ஆண்டு வரக்கூடிய இந்த நேரத்தில் சரி பாதியாக இருக்கக் கூடிய பெண்கள் தங்களுடைய கருத்துக்களை தங்கள் குரலைபதிவு செய்யக்கூடிய ஒரு மாநாடாக, அவர்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கக்கூடிய ஒரு இடமாக இந்த மாநாடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர்  மு.க.ஸ்டாலினும், தி.மு.க.வில் உள்ள பெண்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

மத ரீதியான கலவரம் என்றாலும், மணிப்பூர் கலவரமாக இருந்தாலும் தற்போது வரை மிக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் தான். எனவே அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்கவே மகளிர் உரிமை மாநாடு நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.  

இதனிடையே திமுக மகளிர் உரிமை மாநாட்டில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்ற விவரத்தை பார்க்கலாம்.

திமுக மகளிர் உரிமை மாநாட்டுத் தலைமை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

திமுக மகளிர் உரிமை மாநாட்டு உரை: சோனியா காந்தி

மாநாடு ஏற்பாடு மற்றும் முன்னிலை: கனிமொழி எம்.பி., துணைப் பொதுச்செயலாளர், திமுக.

சிறப்பு அழைப்பாளர்கள்: மெஹபூபா முஃப்தி , முன்னாள் முதலமைச்சர், ஜம்மு & காஷ்மீர் தலைவர், மக்கள் ஜனநாயகக் கட்சி

  • பிரியங்கா காந்தி வத்ரா, பொதுச் செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்
  • சுப்ரியா சுலே, எம்.பி., செயல் தலைவர், தேசியவாத காங்கிரஸ் கட்சி
  • டிம்பிள் யாதவ் எம்.பி சமாஜ்வாதி கட்சி
  • லெஷி சிங் பீகார் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் & தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், ஐக்கிய ஜனதா தளம்
  • ஆனி ராஜா தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி & பொதுச்செயலாளர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்
  • சுபாஷினி அலி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் & பொலிட் பீரோ உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)
  • சுஷ்மிதா தேவ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் & தேசிய செய்தித் தொடர்பாளர், திரிணாமுல் காங்கிரஸ்
  • ராக்கி பிட்லன் டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், ஆம் ஆத்மி கட்சி

Trending News

Latest News

You May Like