தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராது - அண்ணாமலை..!
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை ஈ.சி.ஆரில் தி.மு.க. கொடி பொருத்திய காரில் இளைஞர்கள், இளம்பெண்களை விரட்டும் வீடியோ காட்சி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தமிழகத்தில் எந்தளவு சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதற்கு இது எடுத்துக்காட்டு. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்யும் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.
தி.மு.க. 7-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பகல் கனவில் இருக்கிறார். நாடக கம்பெனி போலத்தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது. எனவே மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவதில்லை. பெரம்பூரில் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வழக்கை நடத்தக்கூடிய அமைப்பு மிக மோசமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
.png)