1. Home
  2. தமிழ்நாடு

தலைநகர் டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

1

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதை கண்டித்து புதூர் பேருந்து நிலைய வளாகத்தில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தோல்வி பயம் காரணமாக திமுகவினர் ரோட் ஷோ நடத்துவதாகவும், டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு அமித்ஷா புறப்படுகின்றார் என்றாலே திமுகவினர் பயப்படுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், மதுரை திமுகவிற்கு ராசியில்லாத நகரம் எனவும், அங்கு நடத்திய பொதுக்குழுவிற்கு பின் திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like