பாமக-வை உடைக்கப் பார்க்கிறது திமுக: அன்புமணி ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!

காஞ்சிபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: பாமகவிற்கும் சமுதாயத்திற்கும் நான் துரோகம் செய்தால் அதுவே என் வாழ்வில் கடைசி நாளாக இருக்கும்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருகிறோம் என 4 ஆண்டுகளாக நம்பவைத்து கழுத்தை அறுத்து விட்டனர். மாநாட்டு கூட்டத்தை பார்த்து முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டது.
கட்சிக்குள் நடக்கும் குழப்பங்களுக்கு தி.மு.க., தான் காரணம். இதை எல்லாம் உடைத் தெறிவோம். பா.ம.க.,வை பலவீனப்படுத்த தி.மு.க., முயற்சிக்கிறது. பா.ம.க.,வில் சில சூழ்ச்சிக்காரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பது விரைவில் தெரியவரும். அமைதியாக இருப்பது எனது பலம்.
நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான்; இந்த பிரச்சனைக்கு நானோ ஐயாவோ காரணம் கிடையாது.. ஒரு சிலர் நம் கட்சியிலேயே அந்த சூழ்ச்சிக்கு துணை போகிறார்கள். யார் யார் என்பது விரைவில் தெரியவரும். திமுகவின் சூழ்ச்சி வெற்றி பெறாது அதை உடைத்து எறிவோம்.
பா.ம.க., நடத்திய கூட்டத்தால் தி.மு.க.,வுக்கு வயிற்றெரிச்சல். கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் துணிச்சலும், திட்டமும் என்னிடம் உள்ளது. நான் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க., ஆட்சியில் குழந்தைகள் முதல் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அண்புமணி கூறினார்.