1. Home
  2. தமிழ்நாடு

பா.ஜ.க கண்டித்து 29ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - தி.மு.க..!

Q

தி.மு.க கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடந்த 9 ம் தேதி சென்னையில் தி.மு.க., அலுவலகத்தில் நடந்த எம்.பி.,க்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, மாநில நலன் குறித்து கேள்விகள் எழுப்பி, அதற்குரிய பதிலை பெற வேண்டும். அத்துடன் மத்திய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழகத்திகு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காதது' குறித்து கேள்வி எழுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்த நிதியை வழங்காதது குறித்து நேற்று தி.மு.க., எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும், தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ., அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் வரும் 29ம் தேதி (சனிக்கிழமை) காலை அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like