1. Home
  2. தமிழ்நாடு

மார்ச் 12ல் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம் .!

Q

தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பா.ஜ., அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழு வை அமைத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் மார்ச் 12ம் தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தித் திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரிய வைக்க வேண்டும்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், பார்லிமென்ட், சட்டசபை உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெறும் விழிப்புணர்வு பொதுக்கூட்டங்களில் மாவட்டம், மாநகரம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர்க் கழக நிர்வாகிகள் கழக அணிகளின் நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்புற நடத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like