வரும் 3-ம் தேதி சென்னையில் அமைதி பேரணி: தி.மு.க. அறிவிப்பு
சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் வெளியிட்ட அறிக்கையில்,
பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளையொட்டி பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் பொருளாளர் டி.ஆர். பாலு மற்றும் முன்னணியினர் பிப்ரவரி 3-ம் தேதி காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். இந்நாளில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக, பகுதிக்கழக, வட்டக்கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, ஆதிதிராவிடர் நல உரிமைப்பிரிவு, மீனவரணி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை உள்ளிட்ட அனைத்து அணியினரும் அஞ்சலி செலுத்த திரண்டு வாரீர் என கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.