1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : திமுக களமிறங்கும் 21 தொகுதிகள்..!திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு..!

1

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதிமுக திருச்சியிலும், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதியில் விசிக என திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு நிறைவடைந்து விட்டது. 

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்தது திமுக. எஞ்சிய 21 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் களம் காணவுள்ளனர்...

  • தென் சென்னை
  • மத்திய சென்னை
  • வட சென்னை
  • ஸ்ரீபெரும்புதூர்
  • காஞ்சிபுரம்
  • வேலூர்
  • அரக்கோணம்
  • திருவண்ணாமலை
  • ஆரணி
  • கள்ளக்குறிச்சி
  • தருமபுரி
  • கோவை
  • பொள்ளாச்சி
  • சேலம்
  • ஈரோடு
  • நீலகிரி
  • தஞ்சாவூர்
  • பெரம்பலூர்
  • தேனி
  • தென்காசி
  • தூத்துக்குடி

 

 மக்களவைத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறது மதிமுக. இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில்,  நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 8.3.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பின்வரும் தொகுதியில் போட்டியிடுவதென இன்று (18.3.2024) தீர்மானிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 9.3.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்வரும் 10 (பத்து) தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (18.3.2024) தீர்மானிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுதிகளின் விவரம்


1. திருவள்ளூர் (தனி)
2. கடலூர்
3. மயிலாடுதுறை
4. சிவகங்கை
5. திருநெல்வேலி
6. கிருஷ்ணகிரி
7. கரூர்
8. விருதுநகர் 
9. கன்னியாகுமரி 
10. புதுச்சேரி

Trending News

Latest News

You May Like