1. Home
  2. தமிழ்நாடு

7.5% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி 24ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

7.5% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி 24ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!


7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சமூகநீதிக்கும், ஜனநாயகத்தின் மகேசர்களான வெகுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைக்கப்பட்டிருக்கும் தமிழகச் சட்டமன்றத்தின் மாண்புகளுக்கும், மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

ஒரு மாதத்திற்கும் மேல் இந்த மசோதா மீது எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதால்நீட்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்வியை நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கடியை மத்திய பா... அரசின் அறிவுரையின் பேரில் தமிழக ஆளுநர் அவர்களும், ஆணித்தரமாக எதிர்த்துப் பேச முடியாமல், உள்நோக்கத்துடன் எப்போதும் அடங்கிப் போகும் அதிமுக அரசும் இருக்கிறது என விமர்சித்துள்ளார்.

7.5% இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி 24ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்!

ஏற்கனவே ஒருமாத காலம் அவகாசம் முடிந்துவிட்ட நிலையில் மேலும் ஒரு மாதம் என்பது 7.5 சதவிகித முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நீர்த்துப் போக வைப்பதாகும், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனுக்கு முற்றிலும் எதிரானதாகும் என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநர் மாளிகை முன் வரும் 24ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக மு..ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like