1. Home
  2. தமிழ்நாடு

திமுக பிரமுகர் வீட்டில் சோதனை! 150 கோடி  ஆவணங்கள் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் !

திமுக பிரமுகர் வீட்டில் சோதனை! 150 கோடி  ஆவணங்கள் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் !


கோவை திமுக பிரமுகருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனையில்,கணக்கில் காட்டப்படாத ரூ.150 ஆணவணங்கள் மற்றும் ரூ. 5 கோடி ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு மற்றும் திருப்பூரில் உள்ள 22 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவையில் திமுக பிரமுகர் பையாக் கவுண்டர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், 150 கோடி ஆவணங்கள் ரூ.5 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக பிரமுகர் வீட்டில் சோதனை! 150 கோடி  ஆவணங்கள் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் !

அதே போன்று, ஈரோடு மற்றும் பெருந்துறையில் நந்தா கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் நந்தா பாலிடெக்னிக், நந்தா இன்ஜினியரிங் , நந்தா டெக்னாலஜி, நந்தா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் , நந்தா டீச்சர் ட்ரைனிங் , நந்தா சிபிஎஸ்இ என 21 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளரான சண்முகம் ஈரோட்டில் குடியிருந்து வரும் நிலையில் அவரது வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த வருமான வரித்துறை சோதனையில் சென்னை , கோவை ,ஈரோடு, சேலத்தைச்சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

நந்தா கல்வி உரிமையாளர் சண்முகம், ஈரோடு திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துச்சாமியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like