கோவில் கருவறைக்குள் புகுந்து பூசாரியை அடித்து உதைத்த திமுக பிரமுகர் !

துறையூர் அருள்மிகு கண்ணனூர் அங்காள பரமேசுவரி அம்மன் திருக்கோவிலில் உள்ளே புகுந்த திமுக பிரமுகர் ஒருவர், சுவாமி மற்றும் பக்தர்கள் முன்னிலையில் பூசாரியாரை அடித்து உதைத்து புரட்டி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணனூரில் அருள்மிகு அங்காள பரமேசுவரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக ஓம்பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில், கோவிலில் மற்ற பக்தர்கள் சுவாமி குடும்பிடுவது போல, திமுக ஒன்றிய கவுன்சிலர் பேபியின் கணவர் லெனினும் சுவாமி தரிசனம் செய்து கொண்டு இருந்தார்.
கருவறைக்குள் திடீரென புகுந்த அவர் அங்கிருந்த கோவில் பூசாரி ஓம்பிரகாஷை சரமாரியாக தாக்கினார். இதில் பூசாரி நிலைகுலைந்து கிழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி அழைத்துச் சென்றனர். மேலும், திமுக பிரமுகர் லெனினை சமாதானமும் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவில் பூசாரியை திமுக பிரமுகர் தாக்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.