பீர் பாட்டிலால் போலீஸ் மண்டையை உடைத்த திமுக பிரமுகர்!
பீர் பாட்டிலால் போலீஸ் மண்டையை உடைத்த திமுக பிரமுகர்!

குடிபோதையில் உதவி ஆய்வாளரை பீர் பாட்டிலால் தாக்கி மண்டையை உடைத்த திமுக பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகர் சுரங்கபாதை அருகே இளைஞர்கள் சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது பணி முடித்து இருசக்கர வாகனத்தில் சென்ற ஆதம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன்தாஸ்(54) என்பவருக்கு வழிவிடாமல் சாலையிலேயே மது குடித்து அதகளம் செய்துள்ளனர்.
போலீஸ்காரர் ஹாரன் அடித்தும் அவர்கள் நகரவில்லை என தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் திடீரென பீர்பாட்டிலால் உதவி ஆய்வாளரின் மண்டையை உடைத்து விட்டு இருசக்கர வாகனத்தின் சாவி, செல்போன் ஆகியவற்றை பிடுங்கி சென்று விட்டனர்.
ரத்தம் கொட்ட கொட்ட உதவி ஆய்வாளர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று 1 3 தையல் போடப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் இது குறித்து பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போதை ஆசாமிகளை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது உதவி ஆய்வாளர் மோகன்தாசை தாக்கியது ஆலந்தூரை சேர்ந்த திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத் என தெரியவந்தது.
அதனடிப்படையில் திமுக பிரமுகர் வினோத்குமார்(30), அஜித்குமார்(23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நபர்களையும் தேடி வருகின்றனர்.
newstm.in