1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்கப்போவதில்லை - திமுக...! அதிமுக பங்கேற்பு!

1

ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். இந்த ஆண்டும் ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தின விழா கொண்டாடப்படும்போது விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும்.சுதந்திர தின விழாவையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் இந்த அழைப்பை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இதில் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்படி இருக்க இன்று காலை அதிமுக சார்பில் விருந்தில் பங்கேற்கப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திமுக சார்பில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் யாரும் பங்கேற்கப்போவதில்லை என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருக்கிறார். அதாவது, “சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது. 

Trending News

Latest News

You May Like