திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம் மோதல்..!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் அம்மாவட்ட கலெக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சி மேடைக்கு வந்த திமுக எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் வரவேற்பு பேனரில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் படம் மட்டும் இடம்பெற்றிருக்கிறது. நடைமுறைபடி நாடாளுமன்ற உறுப்பினர் படம் இருக்க வேண்டும் என கூறி கலெக்டரிடம் அவர் கோபம் அடைந்தார்.
பின்பு நிகழ்ச்சி மேடையில் நலத்திட்ட உதவி வழங்கும்போது, நலத்திட்ட அட்டையை தங்க தமிழ்ச்செல்வன் கையில் இருந்து பிடுங்கி நான் தான் வழங்குவேன் என எம்.எல்.ஏ. மகாராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் மக்கள் முன்னிலையில் இருவரும் கனத்த குரலை எழுப்பி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கலெக்டர், காவல்துறையினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் அனைவரும் தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ. மகாராஜனை சமாதானம் செய்தனர். இதனால் நிகழ்ச்சி விரைவிலே முடிக்கப்பட்டது.
அரசு நலத்திட்ட உதவி நிகழ்ச்சி மேடையில் தேனி ஆட்சியர் முன்னிலையில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நலம் காக்கும் ஸ்டாலின் துவக்க விழா நிகழ்ச்சி.. மேடையிலேயே தி.மு.க MLA, MP கடும் வாக்குவாதம்.!#Theni #DMK #MLA #thangathamizhselvan #Maharajan #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/a0lPOcNXyC
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) August 2, 2025
.png)