உமர் அப்துல்லா பதவியேற்கும் விழாவில், திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு!
தமிழக அரசு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ஜம்மு – காஷ்மீர் தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உமர் அப்துல்லா பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார். வடகிழக்கு பருவமழை காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளதால், நேரில் பங்கேற்க இயலாது என்று அவரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி., பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.