திமுக எம்.எல்.ஏ-வின் மகன் கொரோனாவுக்கு பலி !

சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியத்தின் இளையமகன் அன்பழகன் (34) கொரோனாவால் உயிரிழந்தார்.
சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டார். அதேபோல, அவரது மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவர்கள் இருவரும் முறையான சிகிச்சை பெற்று கொரோனாவில் இருந்து மீண்டுவந்தனர்.
இந்நிலையில், மா. சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகனுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போதிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தீவிர நோய் தாக்கம் காரணமாக உயிரிழந்தார்.
சென்னையில் ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கொரோனா நோயிக்கு பலியான நிலையில், தற்போது, திமுக எம்.எல்.ஏ. மா. சுப்பிரமணியத்தின் இளையமகன் அன்பழகன் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் திமுகவினர் மற்றும் பொது மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.