தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்னுசாமி மாரடைப்பால் மரணம்..!
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் பொன்னுசாமி (74) இன்று (அக்டோபர் 23, வியாழக்கிழமை) மாரடைப்பு காரணமாக காலமானார்.
கொல்லிமலையில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த எம்.எல்.ஏ. பொன்னுசாமிக்கு இன்று அதிகாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொல்லிமலையிலிருந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
.png)