விஜயை மறைமுகமாக சாடி பேசிய எழும்பூர் திமுக எம்எல்ஏ..!
தவெக தலைவர் விஜய், அண்மையில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தனது கட்சியின் கொள்கை, நிலைபாடு உள்ளிட்டவற்றை அறிவித்தார்.குறிப்பாக தனது அரசியல் எதிரா என திமுகவை கூறினார். மேலும் திராவிட அரசை விமர்சித்து கடுமையாக பேசி இருந்தார்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜயை, திமுக எம்எல்ஏ ஒருவர் மறைமுகமாக சாடி உள்ளார். சென்னை பெரியமேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழும்பூர் தொகுதி திமுக எம்எல்ஏ பரந்தாமன் பங்கேற்று இருந்தார்.
அப்போது அவர் பேசுகையில்," அரசியலுக்கு யார் வேண்டும் என்றாலும் வரலாம். அவர்களுக்கு கூட்டம் கூட தான் செய்யும். ஆனால் வாக்குகள் அளிக்க மாட்டார்கள்" என அவர் கூறினார். அவரது இந்த பேச்சு தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடியதை சுட்டி காட்டி இருக்கிறது.