1. Home
  2. தமிழ்நாடு

மத்திய உள்துறை அமைச்சர் வருகையால் திமுகவினர் அரண்டு போயுள்ளனர் : எல்.முருகன்..!

1

மத்திய இணையமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனை ‘ஷாக்கள்’ வந்தாலும் தமிழகத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது எனப் பேசிய முதலமைச்சர் பயத்தில் உறைந்து போயிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷாவின் பேச்சால் நடுங்கிப் போயிருப்பதை திமுகவினரின் பிதற்றல் பேச்சுக்களையும், அறிக்கைகளையும் பார்த்தாலே தெரிகிறது என்று எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, அதில் 10 சதவீதத்தைக் கூட திமுக நிறைவேற்றவில்லை எனவும், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து குடும்ப ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர், தனது ஆட்சியின் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

டாஸ்மாக்கில் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் செய்து மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சி, டெல்லி வழியில் முடிவுக்கு வரப்போவது உறுதி எனக் கூறியுள்ள எல்.முருகன், ஆம் ஆத்மி தலைவர்களைப் போலவே திமுகவினரும் சிறைக் கம்பிகளை எண்ணப்போவதும் உறுதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like