1. Home
  2. தமிழ்நாடு

''திமுக தான் பச்சை சங்கி''.. மேடையிலேயே செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்..

''திமுக தான் பச்சை சங்கி''.. மேடையிலேயே செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்..


சென்னை அம்பத்தூரில் அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் 26 ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்துல் ரவூப் புகைப்படத்துக்கு நினைவு தீபம் ஏற்றி மலர் தூவி சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த கூட்டத்தில் மேடையில் பேசிய சீமான், நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் மீதான கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் சமீபத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் கைது குறித்து விமர்சனம் செய்த அவர், மாரிதாஸ் கைதுக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை சமூக வலைதளங்களில் தொடர்ந்து சங்கி என கூறி வருகின்றனர்.

''திமுக தான் பச்சை சங்கி''.. மேடையிலேயே செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்..

சாட்டை துரைமுருகனின் கைதை எதிர்த்து குரல் கொடுக்கும் திமுக வழக்கறிஞர்கள், மாரிதாஸின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பினார். அப்படி என்றால் யார் சங்கிகள்? என்று கடுமையாக விமர்சித்தார்.

மாரிதாஸ் மீது பதியப்பட்ட வழக்குகளில் எந்தவித நடவடிக்கையும் இன்றி அரசு தரப்பு வழக்கறிஞர் நேரில் ஆஜராகி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காததால் அனைத்து வழக்குகளில் இருந்தும் மாரிதாஸ் வெளியே வந்துள்ளார். இதன்மூலம் திமுகதான் பச்சை சங்கி என பேசினார்.

''திமுக தான் பச்சை சங்கி''.. மேடையிலேயே செருப்பை கழற்றி விமர்சித்த சீமான்..

தொடர்ந்து பேசிய சீமான், நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம். காட்டமாக பேசிய சீமான் ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்து தான் அணிந்திருந்த காலணியை உயர்த்தி காட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

newstm.in

Trending News

Latest News

You May Like