தி.மு.க வன்முறை கலாச்சாரம் கொண்ட கட்சி !! அமைச்சர் சாடல்..

தி.மு.க வன்முறை கலாச்சாரம் கொண்ட கட்சி !! அமைச்சர் சாடல்..

தி.மு.க வன்முறை கலாச்சாரம் கொண்ட கட்சி !! அமைச்சர் சாடல்..
X

தமிழகத்தில் தற்போதைய நிலையில் பெரிய வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகளுக்கு தளர்வு அளிக்க முடியாது என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை முத்துசாமி நகரசபை பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 134-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி அளித்தார். அப்போது , தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தளர்வு அளித்தால் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது சவாலாக மாறிவிடும்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகளுக்கு தளர்வுகள் வழங்கப்படாது. தி.மு.க வன்முறை கலாச்சாரம் கொண்ட கட்சி என்பதற்கு உதாரணமாக அந்த கட்சியின் எம்.எல்.ஏ இதயவர்மனிடமிருந்து ஏராளமான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

Newstm.in

Next Story
Share it