1. Home
  2. தமிழ்நாடு

தி.மு.க., குடும்ப கட்சி. வாரிசு அரசியல் - கடுமையாகச் சாடிய இ.பி.எஸ்!

Q

சேலம், வனவாசியில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: நான் கனவு காணவில்லை, ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார்; அது பலிக்காது. ஒவ்வொரு முறையும் தேசியக்கட்சியை ஆதரிக்கிறோம்; அவர்கள் பதவிக்கு வந்தவுடன் ஏறிய ஏணியை எட்டி உதைப்பதைப் போல், கூட்டணிக் கட்சிகளைப் பொருட்படுத்துவதில்லை. ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்று தான் அவர் மத்தியில் கூட்டணி அமைக்கிறார்.
கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் முதல்வர் ஆனார். உதயநிதி தற்போது துணை முதல்வர் ஆகியுள்ளார். தி.மு.க., குடும்ப கட்சி. வாரிசு அரசியல். மன்னர் பரம்பரையில் தான், அரசனுக்கு பிறகு இளவரசர் வருவார். இந்த நிலைமை தி.மு.க., விலிருந்து கொண்டு இருக்கிறது. தி.மு.க., வில் கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகள் தான், கட்சிக்குத் தலைவராக வர முடியும்.
அ.தி.மு.க., வில் அப்படி இல்லை. யார் கட்சிக்கு உழைக்கிறார்களோ, நேர்மையாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ஒருநாள் ஏதாவது பதவி நிச்சயமாகக் கிடைக்கும். தி.மு.க., வுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பது போல் மாய தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். லோக்சபா தேர்தலில் தி.மு.க., வுக்கு சரிவும், அ.தி.மு.க., வுக்கு செல்வாக்கும் ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., வுக்கு எந்தச் சரியும் இல்லை. லோக்சபா தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு. பெரிய அளவில் கூட்டணி இல்லாமலே, அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.

Trending News

Latest News

You May Like